​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செயலி வழி உணவு வினியோக்கிக்கும் நிறுவனங்களுடன் காவல்துறை ஆலோசனை

Published : Jun 04, 2019 9:14 PM



செயலி வழி உணவு வினியோக்கிக்கும் நிறுவனங்களுடன் காவல்துறை ஆலோசனை

Jun 04, 2019 9:14 PM

செயலி வழியில் உணவு வினியோகிக்கும் ஸ்விகி போன்ற நிறுவன ஊழியர்கள் போக்குவரத்து விதிகளை மீறினால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என காவல் துறையிடம் அந்நிறுவன அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Swiggy, Zomato, Uber Eats மற்றும் Dunzo ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் சென்னை காவல் போக்குவரத்து அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

உணவு வினியோகிக்க செல்லும் இந்நிறுவனங்களின் ஊழியர்கள் பிற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் குவிகின்றன.

இது தொடர்பாக இந்நிறுவனங்களில் ஊழியர்கள் மீது இதுவரை இரண்டாயிரத்து 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சென்னை போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு உணவை விரைவாக கொண்டு சேர்ப்பதற்காக ஊழியர்களை ஊக்குவிக்கும் நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.

காவல் துறையுடன் இணைந்து வாட்ஸ் அப் குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு விதிகளை மீறும் ஊழியர்களின் படத்துடன் தெரிவிக்கப்படும் எனவும், சம்மந்தப்பட்ட நிறுவனங்களை அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.