​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவலர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து போதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு

Published : Jun 04, 2019 2:49 PM



காவலர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து போதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு

Jun 04, 2019 2:49 PM

திருச்சியில் காவலர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் போதை மறுவாழ்வு மையத்தில், மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

கே.கே நகரில் இயங்கி வரும் லைஃப் கேர் சென்டர் குடி மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் 26 பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு சிகிச்சை பெற்று வந்த தமிழ்ச்செல்வன் என்ற காவலர் ஒருவர் அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதுகுறித்து உறவினர்கள் புகார் அளிக்கவே, சென்னை மனநல இயக்குனரகம் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர் நிரஞ்சனா தலைமையில் இருவர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவர் நிரஞ்சனா, பல்வேறு விதிமீறல்கள் உள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் மையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ்ச்செல்வனின் உடலை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.