​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன..!

Published : Jun 03, 2019 6:39 PM



இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன..!

Jun 03, 2019 6:39 PM

இந்திய பங்குச்சந்தைகள் இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டதால் முதலீட்டாளர்கள் ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ளனர்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 4வது காலாண்டில் குறைந்ததை அடுத்து வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 6 சதவீதத்தில் இருந்து பூஜ்யம் புள்ளி இரண்டு ஐந்து சதவீதம் வரை குறைத்து 5 புள்ளி ஏழு ஐந்து சதவீதமாக நிர்ணயிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வரும் 6 ஆம் தேதி இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவிக்க இருக்கிறது. அதன் தாக்கம் முன்னதாகவே பங்குச்சந்தையில் எதிரொலித்தது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 553 புள்ளிகள் உயர்ந்து 40 ஆயிரத்து 268 புள்ளிகள் என்ற இதுவரை இல்லாத புதிய உச்சத்தில் நிறைவடைந்தது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 165 புள்ளிகள் உயர்ந்து 12 ஆயிரத்து 88 புள்ளிகளை முதன்முறையாக எட்டியது. சென்செக்சில் இடம்பெற்றுள்ள 30 நிறுவனங்களில் 27 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன.

இதனால் ஒரேநாளில் முதலீட்டாளர்களுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் 43 காசுகள் உயர்ந்து, 69 ரூபாய் 26 காசுகளாக அதிகரித்தது.