​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மனைவியின் தலையில் சமையல் சிலிண்டரைப் போட்டுக் கொன்ற கணவர்

Published : Jun 03, 2019 10:25 AM

மனைவியின் தலையில் சமையல் சிலிண்டரைப் போட்டுக் கொன்ற கணவர்

Jun 03, 2019 10:25 AM

கோவை வேடப்பட்டியில் குடும்பத் தகராறில் மனைவியின் தலையில் சிலிண்டரைப் போட்டு கொன்ற கணவர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மாரிமுத்து என்ற அந்த நபர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி சுப்பாத்தாள், வெற்றிலை வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மனநிலை பாதிக்கப்பட்ட தனது தம்பியை கவனித்துக்கொள்ளுமாறு சுப்பாத்தாளிடம் மாரிமுத்து வற்புறுத்தி வந்ததாகத் தெரிகிறது. அதற்கு மறுப்பு தெரிவித்து வந்த சுப்பாத்தாளுக்கும் மாரிமுத்துவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இரவு வழக்கம்போல் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மாரிமுத்து, சுப்பாத்தாளின் தலையில் சிலிண்டரைப் போட்டு கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

தொடர்ந்து அவரும் நைலான் கயிற்றைக் கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு விசாரித்து வருகின்றனர்.