​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லியில் பெண்களுக்கு மெட்ரோ ரயில் கட்டணம், பேருந்து கட்டணம் இலவசம்

Published : Jun 03, 2019 6:57 AM

டெல்லியில் பெண்களுக்கு மெட்ரோ ரயில் கட்டணம், பேருந்து கட்டணம் இலவசம்

Jun 03, 2019 6:57 AM

டெல்லியில் பெண்களுக்கு மெட்ரோ ரயில் கட்டணம், பேருந்து கட்டணம் இலவசமாக மாறக்கூடும்.

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் மக்களவைத் தேர்தலில் பெற்ற தோல்வியை ஈடுசெய்யும் முயற்சியில் ஆம் ஆத்மி அரசு ஈடுபட்டுள்ளது. வாக்காளர்களைக் கவரும் வகையில் புதிய திட்டங்களையும் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக அறிவிக்க உள்ளார்.

இதில் டெல்லி மெட்ரோ ரயிலிலும் நகரப் பேருந்துகளிலும் கட்டணத்தை பெண்கள் செலுத்த தேவையிருக்காது என்றும் அதற்கான மானியத்தை மாநில அரசே வழங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான செலவினங்கள், இழப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். டெல்லி பேருந்துகளில் நாள்தோறும் பயணிக்கும் 30 லட்சம் பேரில் 25 சதவீதம்பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.