​​ ஐ.பி.எல். போட்டியின் போது நடத்தப்பட்ட போராட்டத்தில் காவலரை தாக்கியவரின் விவரங்களை தெரிவிக்க காவல்துறை வேண்டுகோள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐ.பி.எல். போட்டியின் போது நடத்தப்பட்ட போராட்டத்தில் காவலரை தாக்கியவரின் விவரங்களை தெரிவிக்க காவல்துறை வேண்டுகோள்


ஐ.பி.எல். போட்டியின் போது நடத்தப்பட்ட போராட்டத்தில் காவலரை தாக்கியவரின் விவரங்களை தெரிவிக்க காவல்துறை வேண்டுகோள்

Apr 16, 2018 7:18 AM

காவிரி மேலாண்மை வாரியம் கோரி ஐ.பி.எல். போட்டியின் போது நடத்தப்பட்ட போராட்டத்தில் காவலரை தாக்கியவரின் விவரங்களை தெரிவிக்குமாறு காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 10ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் கைகலப்பு ஏற்பட்டதில் காவல்துறையினரை இளைஞர் ஒருவர் ஆவேசமாக தாக்கிய காட்சிகள் வெளியாகின.

அந்த நபர் அடையாளம் காணப்படாத நிலையில் அவரைப் பற்றி தகவல் அறிந்தவர்கள் திருவல்லிக் கேணி காவல் ஆய்வாளர் மோகன்தாசின் அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும், தகவல் தெரிவிப்போர் குறித்து ரகசியம் காக்கப்படும் என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.