​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published : Jun 02, 2019 3:23 PM

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Jun 02, 2019 3:23 PM

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

கோடை விடுமுறையையொட்டி, பிரபல சுற்றுலாத்தலமான திற்பரப்பு அருவிக்கு மக்கள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

அருவியில் மிதமாக வரும் தண்ணீரில், வெயிலுக்கு இதமாக அதிக நேரம் குளிக்க மக்கள் ஆர்வம் காட்டினர். மேலும், அங்கு படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.