​​ சென்னை துறைமுகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான இரும்பு காயில்கள் கடத்தல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை துறைமுகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான இரும்பு காயில்கள் கடத்தல்

சென்னை துறைமுகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான இரும்பு காயில்கள் கடத்தல்

Apr 16, 2018 6:46 AM

சென்னை துறைமுகத்தில் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான ஸ்டீல்கள் கடத்தப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஓம் பிரைட் ஸ்டீல்ஸ் என்ற தனியார் நிறுவனம் இரும்பு காயில்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில், ஏற்றுமதி செய்யப்படவிருந்த 25 லட்ச ரூபாய் மதிப்பிலான ஸ்டீல்காயில் கடத்தப்பட்டு விட்டதாக தொழிலதிபர் ராதா துறைமுகம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பேரில் விசாரணை நடத்தியதில்,  ராதாவின் நிறுவனத்தில் பணியாற்றும் விஜய்பிரபு, அஜீத், ரமேஷ் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு 6 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. துறைமுக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணனுக்கு 3 லட்ச ரூபாய்  பணம் கொடுத்துவிட்டு போலி பில் மூலம் கடத்திச் சென்றதாகவும், காயில்களை 14 லட்ச ரூபாய்க்கு விற்றதாகவும் கைதானவர்கள் கூறியுள்ளனர்.