​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் மின்வெட்டே இல்லை - அமைச்சர் தங்கமணி

Published : Jun 02, 2019 3:14 PM

தமிழகத்தில் மின்வெட்டே இல்லை - அமைச்சர் தங்கமணி

Jun 02, 2019 3:14 PM

தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என்றும், தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதாகவும், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிற்சாலைகளில் மின்வெட்டு நிலவுவதாக பரப்பப்படும் செய்திகளில் உண்மையில்லை எனக் கூறினார்.

மேலும் கடந்த 27ம் தேதி காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததால் ஒருசில இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டதாகவும், மக்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது எனவும் கூறினார்.