​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜூன் 20க்குள் காவிரி திறக்காவிட்டால் போராட்டம் - திமுக விவசாய அணி

Published : Jun 02, 2019 2:46 PM

ஜூன் 20க்குள் காவிரி திறக்காவிட்டால் போராட்டம் - திமுக விவசாய அணி

Jun 02, 2019 2:46 PM

ஜூன் 20ம் தேதிக்குள் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை என்றால், தமிழகத்திலுள்ள அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும் என திமுக விவசாய அணி மாநில செயலாளர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், திமுக விவசாய அணி மாநில செயலாளரும், தமிழ்நாடு இயற்கை நீர்வள பாதுகாப்பு அமைப்பின் தலைவருமான கே.பி.ராமலிங்கம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தி திணிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் எனக் கூறினார்.