​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 79 பேர் காயம்

Published : Jun 02, 2019 9:12 AM

வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 79 பேர் காயம்

Jun 02, 2019 9:12 AM

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் 250 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள செர்சிங்ஸ்க் எனுமிடத்தில் உள்ள வெடிமருந்துத் தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் தொழிலாளர்கள் , பொதுமக்கள் உள்ளிட்ட 79 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

வெடி விபத்து காரணமாக அக்கம் பக்கம் இருந்த 180 கட்டடங்கள் அதிர்ந்தன. அவற்றின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறி விழுந்தன. இந்த விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.