​​ எல்லைப் பகுதியில் சீனா- பாகிஸ்தான் தொடர் அத்துமீறல்: ராணுவ அதிகாரிகள் மாநாட்டில் விவாதிக்கத் திட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எல்லைப் பகுதியில் சீனா- பாகிஸ்தான் தொடர் அத்துமீறல்: ராணுவ அதிகாரிகள் மாநாட்டில் விவாதிக்கத் திட்டம்

Published : Apr 16, 2018 11:28 AM

எல்லைப் பகுதியில் சீனா- பாகிஸ்தான் தொடர் அத்துமீறல்: ராணுவ அதிகாரிகள் மாநாட்டில் விவாதிக்கத் திட்டம்

Apr 16, 2018 11:28 AM

அருணாச்சலப் பிரதேச எல்லைப்பகுதியில் கடந்த 17 நாட்களில் சீனப்படைகள் 21 முறை அத்துமீறியதாக இந்திய திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். 

டோக்லாம் எல்லைப் பகுதியில் 71 நாட்களாக முகாமிட்டிருந்த சீனப்படைகள், இருநாடுகளின் சமாதானப் பேச்சுக்குப் பின் வாபஸ்பெறப்பட்டன. ஆயினும், இந்திய எல்லையில் சீனப்படைகளின் ஆக்ரமிப்பும் அத்துமீறலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

லடாக் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரையிலான எல்லைப் பகுதியில் 19 கிலோமீட்டர் வரை ஊடுருவ சீனப்படைகள் முயன்று வருவதாகவும், இந்தியப் படைகளின் வலிமையான எதிர்ப்பால் பின்வாங்கிச் செல்வதாகவும் உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 17 நாட்களில் சீனப்படைகள் 21 முறை அத்துமீறியதாக இந்தோ- திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்கும் 6 நாள் கருத்தரங்கு டெல்லியில் இன்று தொடங்குகிறது. ராணுவத் தளபதி பிபின் ராவத் தலைமையில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கில், சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளின் நிலவரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளன. எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவு படுத்துதல், அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுத்தல், எதிரிகளின் தாக்குதலை முறியடிப்பதற்கான வழிமுறைகள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.