​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேர்தலில் தோல்வியை கண்டு துவளவில்லை - டி.டி.வி தினகரன்

Published : Jun 01, 2019 3:43 PM

தேர்தலில் தோல்வியை கண்டு துவளவில்லை - டி.டி.வி தினகரன்

Jun 01, 2019 3:43 PM

தேர்தலில் பெரும் வெற்றியை எதிர்பார்த்தாலும் தோல்வியை கண்டு துவளவில்லை என அமமுக பொதுசெயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை அசோக் நகரில் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்கள் தீர்ப்பை ஏற்று தொடர்ந்து மக்கள் நலனுக்காக பாடுபடுவோம் எனவும் மும்மொழிக் கொள்கையை தமிழகத்தில் கட்டாயமாக்குவது தவறான செயல், அதனை திணித்தால் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.