​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கு ஆவணங்கள் அனுப்பிவைப்பு

Published : Jun 01, 2019 7:22 AM



சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கு ஆவணங்கள் அனுப்பிவைப்பு

Jun 01, 2019 7:22 AM

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கின் ஆவணங்கள் மற்றும் கோப்புகளை நான்கு லாரிகள் நிறைய ஏற்றி அனுப்பியது கொல்கத்தா காவல்துறை.

இவ்வழக்கை காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வந்தது. கொல்கத்தா காவல்துறை ஆணையர்  ராஜீவ்குமார் குற்றவாளிகளை தப்ப உதவியதாக குற்றம் சாட்டி விசாரணைக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான கோஷிடம் இரண்டு நாட்களாக சுமார் 16 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

கைப்பற்றிய ஆவணங்களில் ஒரு பகுதியை காவல்துறை சிபிஐயிடம் ஒப்படைக்காமல் மறைத்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், இவ்வழக்குத் தொடர்பான ஆவணங்கள், கோப்புகள் அனைத்தையும் நான்கு லாரிகளில் கொல்கத்தா காவல்துறை சிபிஐக்கு அனுப்பி வைத்துள்ளது