​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிண்டி பொறியியல் கல்லூரி கட்டடங்களை புதுபிக்க நிதி கோரி விண்ணப்பம்

Published : May 31, 2019 6:27 PM

கிண்டி பொறியியல் கல்லூரி கட்டடங்களை புதுபிக்க நிதி கோரி விண்ணப்பம்

May 31, 2019 6:27 PM

கிண்டி பொறியியல் கல்லூரிக் கட்டிடங்களை புதுப்பிக்கவும், வளர்ச்சி திட்டங்களுக்காகவும் ரூ.205 கோடி நிதியுதவி கோரி மத்திய அரசிடம் கல்லூரி நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.

அண்ணா பல்கலைகழகத்தில் செயல்பட்டு வரும் கிண்டி பொறியியல் கல்லூரியின் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த கட்டிடங்களை புதுப்பிக்க பல்கலைக்கழக மானியக்குழுவிடம் 5 கோடி ரூபாய் நிதியுதவி கோரி கிண்டி கல்லூரி நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.

மேலும், இந்திய பாரம்பரியக் கல்லூரிகள் பட்டியலில் இதனை இணைத்து, கல்லூரியின் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்காக 200 கோடி ரூபாய் நிதியை ஒதுக்குமாறு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடமும் கல்லூரி நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.

அதன் மூலம் புதிதாக தொல்லியல்
மற்றும் கட்டடவியல் படிப்புகளில் புதிய சான்றிதழ் படிப்பு மற்றும் பட்டயப்படிப்புகளை வரும் கல்வியாண்டு முதல் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.