​​ கண்ணசைவில் ரசிகர்களை வென்ற மலையாள நடிகை: சமூக வலைதளங்களில் சென்சேசன் ஆன பிரியா வாரியர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கண்ணசைவில் ரசிகர்களை வென்ற மலையாள நடிகை: சமூக வலைதளங்களில் சென்சேசன் ஆன பிரியா வாரியர்

கண்ணசைவில் ரசிகர்களை வென்ற மலையாள நடிகை: சமூக வலைதளங்களில் சென்சேசன் ஆன பிரியா வாரியர்

Feb 13, 2018 10:52 AM

ஒரு கண்ணசைவில் லட்சக் கணக்கான ரசிகர்களைப் பெற்று சமூகவலைத்தளங்களில் பிரபலமாகியுள்ள நடிகை பிரியா வாரியருக்கு மூன்றே நாட்களில் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் சுமார் 17 லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்கள் கிடைத்துள்ளனர்.

விரைவில் திரைக்கு வரவுள்ள Oru Adaaru Love என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்றுள்ள “மாணிக்க மலரே” என்ற பாடலில் 2 நிமிடங்களுக்கும் குறைவாக இடம்பெறும் பிரியா வாரியர்தான் கண்ணசைவில் லட்சக் கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார். புருவத்தை அசைத்து ஒரு கண்வெட்டில் காதலைச் சொல்லும் அந்த காட்சிதான் இளைஞர்களின் நெஞ்சங்களில் நிறைந்து, சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளது.

புருவத்தை அசைத்து ஒரு கண்வெட்டில் காதலைச் சொல்லும் பிரியா வாரியரின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை முழுக்க முழுக்க ஆக்கிரமித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 9ந் தேதி வரை வெறும் 9 ஆயிரம் பேர் மட்டுமே பிரியா வாரியரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வந்தனர். ஆனால் மாணிக்க மலரே பாடல் வெளியான பிறகு, இன்ஸ்டாகிராமில் பிரியா வாரியரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் 17 லட்சத்தை கடந்துள்ளது.