12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தியதில் பிழைகள் கண்டறியப்பட்டதால், பிழைகளுக்கு காரணமான 500 ஆசிரியர்களுக்கு அரசுத்தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 19ஆம் தேதி முடிவடைந்தன. இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 21ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தப்பட்டு ஏப்ரல் 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
இதன் பின்னர் 50 ஆயிரம் பேர் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்ததை அடுத்து, விடைத்தாள் நகல் வாங்கிய 4 ஆயிரம் பேர் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தனர்.
மறுகூட்டலின் போது உயிரியல் பாடத்தில் ஏராளமான பிழைகள் கண்டறியப்பட்டதால், விடைத்தாள் திருத்தியவர்கள், கண்காணித்த 500 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு விளக்கம் அளிக்க கோரி அரசுத்தேர்வுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விளக்கத்தைப் பொறுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.