​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இடைத்தேர்தலில் வென்ற 13 திமுக MLA-கள் பதவியேற்பு

Published : May 28, 2019 7:21 AM

இடைத்தேர்தலில் வென்ற 13 திமுக MLA-கள் பதவியேற்பு

May 28, 2019 7:21 AM

தமிழக சட்டப்பேரவை இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 13 பேர் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற அரவக்குறிச்சி செந்தில் பாலாஜி, திருப்பரங்குன்றம் டாக்டர் சரவணன், பெரம்பூர் ஆர்.டி.சேகர்,ஒட்டப்பிடாரம் சண்முகையா, திருவாரூர் பூண்டி கலைவாணன்,தஞ்சாவூர் நீலமேகம், ஓசூர் எஸ்.ஏ.சத்யா, ஆம்பூர் அ.செ.வில்வநாதன், குடியாத்தம் காத்தவராயன், பெரியகுளம் கே.எஸ்.சரவணக்குமார், ஆண்டிபட்டி ஏ.மகாராஜன், பூந்தமல்லி கிருஷ்ணசாமி, திருப்போரூர் எஸ்.ஆர்.இதயவர்மன் ஆகியோர் சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இதனை அடுத்து சென்னை தலைமைச் செயலகம் சென்ற அவர்கள் சபாநாயகர் அறையில் எம்.எல்.ஏ.க்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

அப்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தற்போதைய நிலையில் தி.மு.க. உறுப்பினர்கள் எண்ணிக்கை 101 ஆகவும் தி.மு.க. கூட்டணி உறுப்பினர்கள் எண்ணிக்கை 110 ஆகவும் உள்ளது.