​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல் டேங்கரில் தீ

Published : May 27, 2019 1:38 PM

மேம்பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல் டேங்கரில் தீ

May 27, 2019 1:38 PM

மும்பையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று, திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

கோரேகான் பகுதியில் உள்ள வெஸ்டின்((westin)) மேம்பாலத்தின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்று திடீரென தீப்பிடித்ததை அடுத்து, மேம்பாலம் வழியாக சென்ற வாகனங்கள் மேற்கொண்டு பயணத்தை தொடராமல் வரிசை கட்டி நின்றன.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சிறிது நேர போராட்டத்துக்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் உயிர்சேதம் எதுவுமில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.