​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
3 மாதங்களுக்குப் பின் தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர்

Published : May 27, 2019 12:26 PM

3 மாதங்களுக்குப் பின் தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர்

May 27, 2019 12:26 PM

தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்ததையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்று மாதங்களுக்கு பின் சென்னை தலைமைச் செயலத்துக்கு வந்து தனது வழக்கமான பணிகளை தொடங்கினார்.

மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலை முன்னிட்டு கடந்த மார்ச் 10-ம் தேதி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து தலைமைச்செயலகத்தில் ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வருவதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் தலைமைச் செயலக 6-வது நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மூன்று மாதங்களுக்கு பின் இன்று தலைமைச்செயலகம் வந்து தங்கள் வழக்கமான பணிகளைத் தொடங்கினர்.