​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசு மதுபான கடையில் ரூ.5 லட்சம் பணம் கொள்ளை

Published : May 27, 2019 7:16 AM

அரசு மதுபான கடையில் ரூ.5 லட்சம் பணம் கொள்ளை

May 27, 2019 7:16 AM

சென்னை தரமணியில் அரசு மதுபானக் கடையில் 5 லட்சம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் நகரில் உள்ள இக்கடையின் ஊழியர்கள், நேற்று கடையை திறந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் கடையின் சுவற்றை துளையிட்டு பணத்தை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

தரமணி போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மதுபானக் கடைக்கு அருகில் இருக்கும் பாரின் மேற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் திட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. கடை ஊழியர்களுக்கு கொள்ளை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.