​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அடுத்த மாதம் பிரதமர் மோடி மாலத்தீவு செல்கிறார்

Published : May 27, 2019 6:35 AM

அடுத்த மாதம் பிரதமர் மோடி மாலத்தீவு செல்கிறார்

May 27, 2019 6:35 AM

மோடி பிரதமர் பதவியேற்றபின், முதல் வெளிநாட்டுப் பயணமாக, அடுத்த மாதம் மாலத்தீவு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் 7-8 தேதிகளில் மாலத்தீவு தலைநகர் மாலிக்கு வருகை தர இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன. அண்மையில் அதிபர் இப்ராஹிம் சோலி பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் வகையில், இந்தியா நெருக்கமான நட்புறவைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்த நிலையில், மோடி பதவியேற்புக்குப் பின் முதல் வெளிநாட்டுப் பயணமாக மாலத்தீவை தேர்ந்தெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.