​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரேபரேலி தொகுதி மக்களுக்கு சோனியா நன்றி தெரிவித்து கடிதம்

Published : May 27, 2019 6:32 AM

ரேபரேலி தொகுதி மக்களுக்கு சோனியா நன்றி தெரிவித்து கடிதம்

May 27, 2019 6:32 AM

நாட்டிற்கான மதிப்பைப் பாதுகாப்பதற்காக எந்தவிதமான தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்பதாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அவர், தொகுதி மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தனக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தாத சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து நாட்டின் நன்மதிப்பினைக் காப்பாற்ற எதையும் தியாகம் செய்யத் தயாராக இருப்பதாக அதில் குறிப்பிட்டுள்ளார். வரும் நாட்கள் கடினமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், மக்களின் ஆதரவுடன் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.