​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்பி.க்களில் 43சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள்

Published : May 26, 2019 8:15 PM

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்பி.க்களில் 43சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள்

May 26, 2019 8:15 PM

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற எம்பி.க்களில் 43 சதவீதம் பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாய சீர்திருத்த சங்கம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

வெற்றி பெற்ற 539 எம்பிக்களை ஆய்வு செய்ததில், 233 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. இது 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 26 சதவீதம் அதிகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாஜக எம்பிக்கள் 116 பேர் மீதும், காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் 29 பேர் மீதும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 13 எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்ட்டுள்ளது. திமுகவின் 10 எம்பிக்கள், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த 9 எம்பிக்கள் மீதும் குற்ற வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.