​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இஸ்ரேல் பிரதமர் பதவி விலகக்கோரி ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டம்

Published : May 26, 2019 5:57 PM

இஸ்ரேல் பிரதமர் பதவி விலகக்கோரி ஏராளமானோர் திரண்டு ஆர்ப்பாட்டம்

May 26, 2019 5:57 PM

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது ஊழல் குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைக்க அவர் முயற்சிப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பாக ஆதாரம் இருப்பதாகவும், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதாகவும் அட்டர்னி ஜெனரலிடம் அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வகையில், உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தை குறைக்கும் வகையிலான மசோதாவை பெஞ்சமின் நேதன்யாகு கொண்டுவர உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இதை கண்டித்து, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பெஞ்சமின் நேதன்யாகு பதவி விலக வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.