​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் 10வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை

Published : May 26, 2019 5:40 PM

எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தில் 10வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை

May 26, 2019 5:40 PM

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக மாணவி, கல்லூரி விடுதி கட்டிடத்தின் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு அருகே செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம் பல்கலைகழத்தில், திருவள்ளூர் மாவட்டம் பென்னேரியை சேர்ந்த அனுப்பிரியா என்ற மாணவி 3ம் ஆண்டு பயோமெடிக்கல் படித்து வந்துள்ளார். கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவி, திடீரென விடுதிக் கட்டிடத்தின் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து வந்த மறைமலை நகர் போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.