​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தது - தலைமை தேர்தல் கமிஷன்.

Published : May 26, 2019 5:28 PM

தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தது - தலைமை தேர்தல் கமிஷன்.

May 26, 2019 5:28 PM

தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக முடிவுக்கு வந்துள்ளதாக தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் தேதி மற்றும் ஆந்திரா,ஒடிஷா,சிக்கிம் , இமாச்சலப்பிரதேசம் ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதும் உடனடியாக தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்கு வந்தன.

இதனால் அரசுகள் புதிய திட்டங்கள் , கொள்கைகளை அறிவிக்க இயலாத நிலையில் கட்சிகள் சார்பில் தேர்தல் அறிக்கையாக தங்கள் வாக்குறுதிகளை வெளியிட்டன.தற்போது முடிவுகள் வெளியாகி தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவுற்றதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் நான்கு மாநிலங்கள் உள்பட நாடுமுழுவதும் முடிவுக்கு வந்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.