​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாக்குகளை குறைக்க முடிந்ததே தவிர வெற்றியை தடுக்க இயலவில்லை - திருமாவளவன்

Published : May 26, 2019 5:27 PM

வாக்குகளை குறைக்க முடிந்ததே தவிர வெற்றியை தடுக்க இயலவில்லை - திருமாவளவன்

May 26, 2019 5:27 PM

எதிரணியினரால் தன்னுடைய வாக்கு சதவீதத்தை மட்டுமே குறைக்க முடிந்ததாகவும், தன்னுடைய வெற்றியை தடுக்க இயலவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில், திருமாவளவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதச்சார்பின்மை, சமூகநீதி, ஈழத் தமிழர்களின் நலன்களை பாதுகாக்க நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன் என கூறினார். முன்னதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை, திருமாவளவன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.