​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் வசந்தகுமார்

Published : May 26, 2019 3:57 PM

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் வசந்தகுமார்

May 26, 2019 3:57 PM

தமிழக சட்டப்பேரவை சபாநாயகரை நாளை சந்தித்து, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கவுள்ளதாக வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்றுள்ள காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார், சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வசந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து திமுக சட்டத்துறை நிர்வாகிகளுடன் ஆலோசித்ததாக தெரிவித்தார். இதற்கான ராஜினாமா கடிதத்தை நாளை சபாநாயகரிடம் கொடுக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.