​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
WhatsApp குரூப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆம் ஆத்மி MLA

Published : May 26, 2019 3:04 PM

WhatsApp குரூப்பில் இருந்து நீக்கப்பட்ட ஆம் ஆத்மி MLA

May 26, 2019 3:04 PM

ஆம் ஆத்மி எம்எல்ஏ அல்கா லம்பா, அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்துவரும் நிலையில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் வாட்ஸ் ஆப் குரூப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக விளங்கி வருபவர் அல்கா லம்பா. டெல்லி சாந்தினி சவுக் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவான இவருக்கும், கட்சி தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என அல்கா லம்பா வலியுறுத்தினார். கூட்டணி அமையாத நிலையில், ஆம் ஆத்மி டெல்லியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது.

இதை அல்கா லம்பா விமர்சித்த நிலையில், அவர் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் வாட்ஸ் ஆப் குரூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆம் ஆத்மியில் எனது பயணம் 2020 ஆம் ஆண்டு இறுதியுடன் முடிவடையும் என அல்கா லம்பா தெரிவித்துள்ளார்.