​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராஜீவ்குமாருக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பித்த சிபிஐ

Published : May 26, 2019 2:05 PM

ராஜீவ்குமாருக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பித்த சிபிஐ

May 26, 2019 2:05 PM

கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளது.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கை நீர்த்துப் போகச் செய்ததாக ராஜீவ் குமார் மீது சிபிஐ குற்றம்சாட்டியது. கைது நடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்த போது ராஜீவ் குமார் உச்சநீதிமன்றத்தை நாடினார். அவரைக் கைது செய்ய 7 நாட்கள் தடை விதிக்கப்பட்டது.

தடையை நீட்டிக்கக் கோரிய போது, அதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இதை அடுத்து ராஜிவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கையை சிபிஐ தொடங்கியுள்ளது.

அவர் வெளிநாடுகளுக்கு தப்பி விடக் கூடாது என்பதற்காக, லுக் அவுக் நோட்டீஸ் பிறப்பித்துள்ள சிபிஐ, அதை விமான நிலையங்கள் மற்றும் சர்வதேச எல்லைப் பாதுகாப்பு முகமைகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் ராஜீவ் குமாருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.