​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2.5 அடி உயரம் கொண்ட ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு

Published : May 26, 2019 11:53 AM

2.5 அடி உயரம் கொண்ட ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு

May 26, 2019 11:53 AM

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கோவில் குளத்தை சுத்தம் செய்யும் போது இரண்டரை அடி உயரம் கொண்ட ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது.

தேவகோட்டை அடுத்த கண்டதேவி என்ற கிராமத்தில் பழமை வாய்ந்த சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் மாசடைந்த குளத்தை தனியார் அமைப்பினர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குளத்தில் சுமார் இரண்டரை அடி உயரம் கொண்ட ஐம்பொன்னால் ஆன லட்சுமி அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினர் அம்மன் சிலையை மீட்டுக் கொண்டு சென்றனர். பெரம்பலூர் மாவட்டம் பொன்னகரத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 1996ஆம் ஆண்டு மாயமான சிலை இச்சிலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.