​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குன்னூர் பழக்கண்காட்சியைக் காணக் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Published : May 26, 2019 9:11 AM

குன்னூர் பழக்கண்காட்சியைக் காணக் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

May 26, 2019 9:11 AM

கோடை விடுமுறை முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களில் ஆயிரக்கணக்கானோர் குடும்பங்களுடன் குவிந்திருந்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நேற்று தொடங்கியது. ஒன்றரை டன் பழங்களைக் கொண்டு 7 அடுக்குகளில் அமைக்கப்பட்ட பழ அலங்காரத்தை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். பழங்களால் வடிவமைக்கப்பட்ட நுழைவாயில், மயில், வண்ணத்துப்பூச்சி ஆகியவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன. அரியவகை பழங்களான துரியன், வெல்வெட் ஆப்பிள், ரோஸ் ஆப்பிள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நடைபெற்ற படகுப் போட்டியில், கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கொடைக்கானில் ஏரியில் 14 சுற்றுகளாக துடுப்பு மற்றும் தட்டை படகு போட்டிகள் நடைபெற்றன. ஜூனியர் மற்றும் சப் ஜூனியர் என பிரிக்கப்பட்டு நடைபெற்ற இந்த படகு போட்டியில், கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர். 


மோட்டார் சைக்கிள்கள், வேன்கள், கார்களில் வந்தவர்கள் ஆங்காங்கே சாலையோரத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்திச் சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.