​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எரிபொருள் பற்றாக்குறையால் சாலையில் தரையிறங்கிய விமானம்

Published : May 26, 2019 6:35 AM

எரிபொருள் பற்றாக்குறையால் சாலையில் தரையிறங்கிய விமானம்

May 26, 2019 6:35 AM

அமெரிக்காவில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சிறிய விமானம் ஒன்று அவசரமாக சாலையில் தரையிறங்கிய போது காரில் மோதி விபத்துக்குள்ளானது.

ஃபுளோரிடா அருகில் உள்ள மெயிட்லேண்ட் என்ற இடத்தில் சிறிய ரக விமானம் ஒன்று சுற்றித் திரிந்தது. அப்போது விமானத்தில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் விமானம் தரையில் விழும் நிலை உருவானது. இதனையறிந்த விமானி, விமானத்தை அருகில் இருந்த நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறக்கினார்.

அப்போது வேகமாக வந்த கார் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த ஒருவர் படுகாயமடைந்தார். இந்த சம்பவம் குறித்து மெயிட்லேண்ட் போலீசார் விசாரித்து வருகின்றனர்.