​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரபேல் விவகாரத்தில் நீதிமன்றத் தலையீடு தேவையற்றது

Published : May 26, 2019 6:31 AM

ரபேல் விவகாரத்தில் நீதிமன்றத் தலையீடு தேவையற்றது

May 26, 2019 6:31 AM

ரபேல் விமானங்கள் வாங்கியது தொடர்பான வழக்கில், இதுவரை முதல் தகவல் அறிக்கை கூட தாக்கல் செய்யப்படவில்லை என்றும் சிபிஐ விசாரணையும் மிகக் குறைந்த அளவிலேயே நடந்திருப்பதாகவும் மத்திய அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரபேல் விமான பேரத்தில் நீதிமன்றம் தலையிடுவது தேவையற்றது என்றும் அரசுத் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாத உத்தரவில் உச்ச நீதிமன்றம் தலையிடுவது அவசியமில்லை என்று கருத்து கூறியதையும் அரசுத் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனவே விசாரணைக்கு உத்தரவிட வேண்டிய அவசியமில்லை என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,பிரான்ஸ் நாட்டின் பாரீசில் உள்ள இந்திய விமானப் படை திட்ட அலுவலகத்தில் ரபேல் விமான பேரம் தொடர்பான ஆவணங்களை களவாட நடந்த முயற்சியில் எந்த ஒரு முக்கிய ஆவணமும் களவு போகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.