​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 542 எம்பிக்கள் பட்டியல்

Published : May 26, 2019 6:25 AM

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற 542 எம்பிக்கள் பட்டியல்

May 26, 2019 6:25 AM

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைத்த தேர்தல் ஆணையர்கள் 17 வது மக்களவையைக் கூட்டும்படி கேட்டுக் கொண்டனர்.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 542 உறுப்பினர்களின் பட்டியலுடன், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்களான அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து பட்டியலை அளித்தனர்.

தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த தேர்தல் ஆணையம் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும், வாக்களித்த மக்களுக்கும் குடியரசுத் தலைவர் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.