​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிறுபான்மை மக்களுக்கு உள்ள கற்பனையான பயத்தை போக்க வேண்டும்

Published : May 26, 2019 6:14 AM

சிறுபான்மை மக்களுக்கு உள்ள கற்பனையான பயத்தை போக்க வேண்டும்

May 26, 2019 6:14 AM

பாஜக மீது சிறுபான்மை மக்களுக்கு உள்ள கற்பனையான பயத்தைப் போக்கி அவர்கள் நம்பிக்கையைப் பெற பாடுபடுமாறு தமது கட்சி எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, வாக்களித்தவர்களுக்கு மட்டுமின்றி வாக்கு அளிக்காதவர்களையும் சேர்த்துக் கொண்டு தான் முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தினார். சிறுபான்மை மக்களை காங்கிரஸ் கட்சி வாக்கு வங்கியாக பயன்படுத்தி வந்ததாக கூறிய மோடி பாஜக மீதான சிறுபான்மை மக்களின் எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று கூறினார்.

சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வெல்ல வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் பல ஆண்டு காலமாக சிறுபான்மை மக்கள் அச்சத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர் என்று குறிப்பிட்டார். அரசியல் கட்சிகள் சிறுபான்மை மக்களை வாக்குகளுக்காக பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்கு துரோகம் புரிவதாகவும் மோடி விமர்சித்தார். சுதந்திரப் போராட்டத்தில் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து நாட்டின் விடுதலைக்காக தியாகங்களை புரிந்ததாக கூறிய மோடி, எம்பிக்கள் ஆடம்பரமாக வாழக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

நம்மை தேர்ந்தெடுத்தவர்கள் ஏழை மக்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்று குறிப்பிட்ட மோடி, 2019ம் ஆண்டு தேர்தல் பிரிவினை சுவர்களை தகர்த்து விட்டதாகவும் சமூக ஒற்றுமையை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறினார். மேலும் விஐபி கலாச்சாரத்தை கை விட்டு சாமான்ய மக்களுடன் ஒன்று கலந்து பழகும்படி கட்சியினரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.