​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மோடி வெற்றியால் மொட்டையடித்த காங்கிரஸ் தொண்டர்

Published : May 25, 2019 5:55 PM

மோடி வெற்றியால் மொட்டையடித்த காங்கிரஸ் தொண்டர்

May 25, 2019 5:55 PM

மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பில்லை என பா.ஜ.க. தொண்டரிடம் பந்தயம் கட்டி தோற்ற மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தொண்டர் தலையை மொட்டையடித்துக்கொண்டார்.

தேர்தலுக்கு முன்பு ராஜ்கர் (Rajgarh) மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தொண்டர் பாபு லால் சென்னும் பா.ஜ.க. தொண்டர் ராம்பாபு மண்ட்லாயும் அவரவர் கட்சிகளின் தலைவர்கள் பிரதமர் ஆகவில்லை எனில் தலையை மொட்டையடித்துக்கொள்வது என பந்தயம் கட்டிக்கொண்டனர்.

இந்நிலையில் பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வென்றதையடுத்து காங்கிரஸ் தொண்டர் பாபு லால் சென் தலையை மொட்டையடித்துக் கொண்டார்.

image

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கட்சிகளின் தொண்டர்கள் தேர்தல் நேர பந்தயங்களுக்கு உயர் மதிப்பளித்து அவற்றை நிறைவேற்றுகின்றனர்.