​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரபேல் விவகாரம்: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்ய, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

Published : May 25, 2019 5:47 PM

ரபேல் விவகாரம்: சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்ய, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

May 25, 2019 5:47 PM

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான அனைத்து சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்யுமாறு, உச்சீநிதிமன்றத்தை, மத்திய அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், முறைகேட்டுக்கான முகாந்திரம் இல்லை என, கடந்த டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோர், சீராய்வு மனுத் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் மனுவில், ரபேல் விவகாரம் தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்க கோரும் சீராய்வு மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.