​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சூரத் தீ விபத்து குறித்து விசாரணை நடத்த குழு அமைப்பு என குஜராத் முதலமைச்சர் தகவல்

Published : May 25, 2019 5:46 PM

சூரத் தீ விபத்து குறித்து விசாரணை நடத்த குழு அமைப்பு என குஜராத் முதலமைச்சர் தகவல்

May 25, 2019 5:46 PM

சூரத் தீவிபத்து குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாக குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி கூறியுள்ளார்.

தீவிபத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயிரிழந்திருப்பது துரதிருஷ்டவசமானது என்று அவர் கவலை தெரிவித்தார். இதுகுறித்து நகர்ப்புற செயலரிடம் அறிக்கை கேட்டுள்ளதாகவும், அது கிடைத்தவுடன் அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி கூறினார்.

தற்போது, தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்தின் கட்டுமான நிறுவன உரிமையாளரும், நிறுவன மேலாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விஜய் ரூபானி தெரிவித்தார். இதனிடையே தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு தாமதமானதாகக் கூறப்பட்ட புகாரில், சூரத் தீயணைப்புத் துறையின் இரு உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.