​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு

Published : May 25, 2019 5:05 PM

மஞ்சுவிரட்டு போட்டியில் காளை முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு

May 25, 2019 5:05 PM

சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு போட்டியின்போது காளை முட்டியதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே உள்ள கீழக்கோட்டையில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த போட்டியில் அழகமாநகரி கிராமத்தைச் சேர்ந்த பாலகுரு என்பவரும் கலந்துகொண்டார்.

இவர் காளை ஒன்றை அடக்க முற்பட்டு, பின்புறத்தில் இருந்து திடீரென வேகமாக ஓடிச் சென்று அதன் திமிலை பிடிக்க முயன்றார். இதனை எதிர்பாராததால் மிரட்சி அடைந்த காளை, அவரை தனது கூர்மையான கொம்புகளால் குத்திக் கிழித்தது. இதில் குருதி பீறிட தரையில் சரிந்த பாலகுரு, சில நொடிகளில் உயிரிழந்தார்.