​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு பின் ஓய்வு பெற 5 முக்கிய வீரர்கள் முடிவு

Published : May 25, 2019 4:17 PM

உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு பின் ஓய்வு பெற 5 முக்கிய வீரர்கள் முடிவு

May 25, 2019 4:17 PM

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு பின்னர் 5 முக்கிய வீரர்கள் ஓய்வு பெற உள்ளனர். 

வரும் 30 ஆம் தேதி தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் ஓய்வு பெற உள்ளவர்களில் ஒருவர் 37 வயதான டோனி.

39 வயதான கிரிஸ் கெயில்,இதுவரை மேற்கிந்திய தீவுகளுக்காக நான்கு உலக கோப்பை தொடர்களில் பங்கேற்று உள்ளார். அவர் இந்த தொடருடன் ஓய்வு பெற உள்ளார்.

35 வயதான ராஸ் டெய்லர், நியூசிலாந்து அணிக்காக பல போட்டிகளில் கேப்டனாகவும் செயல்பட்டு உள்ளார். இருப்பினும் இவர் தனது ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்.

35 வயதான டேல் ஸ்டெயின் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர். இவரும் தனது ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது. 

தென் ஆப்பிரிக்க அணியின் ரன் மெஷினான 36 வயதான ஹசிம் அம்லாவுக்கும் இதுதான் கடைசி உலக கோப்பை தொடராக இருக்கும்.