​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரதமர் மோடியை மீண்டும் சந்திக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

Published : May 25, 2019 4:04 PM

பிரதமர் மோடியை மீண்டும் சந்திக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

May 25, 2019 4:04 PM

ஜப்பானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் மோடியை சந்திக்கிறார்.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜப்பானில் ஜூன் மாதம் 28, 29ம் தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது என்றும் இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்போது அவர் இரண்டாவது முறையாக இந்திய பிரதமர் மோடியை சந்திக்கிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தேர்தலில் அபார வெற்றி பெற்று தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றிய பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.