​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேரள லாட்டரி குலுக்கலில் தமிழக வியாபரிக்கு முதல் பரிசு

Published : May 25, 2019 4:00 PM

கேரள லாட்டரி குலுக்கலில் தமிழக வியாபரிக்கு முதல் பரிசு

May 25, 2019 4:00 PM

கேரளாவில் நெல்லையை சேர்ந்தவரிடம் விற்காமல் இருந்த லாட்டரி சீட்டில் 5 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது.

நெல்லை மாவட்டம் கோட்டை கருங்குளம் பகுதியை சேர்ந்த செல்லையா, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் கேரள மாநிலம் மூவாற்றுப்புழாவில் குடியேறினார். ஏழ்மை நிலையில் குடும்பத்தை நடத்தி வந்த செல்லையா, லாட்டரி சீட்டுகளை வாங்கி அதை நடந்தே சென்று விற்று வந்தார்.

சமீபத்தில் கேரள அரசு வெளியிட்ட காருண்யா பாக்கியஸ்ரீ பம்பர் லாட்டரி சீட்டுகளை வாங்கி விற்ற போது, 4 சீட்டுகள் மட்டும் விற்பனையாகவில்லை. யாரும் அவற்றை வாங்கவில்லை. ஆனால் லாட்டரி முடிவுகள் வெளியானபோது, விற்காமல் இருந்த ஒரு சீட்டிற்கு முதல் பரிசான 5 கோடி ரூபாய் கிடைத்திருந்தது தெரிய வந்தது.