​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தின் அரணாக திமுக கூட்டணி விளங்கும் - வைகோ

Published : May 25, 2019 3:01 PM

தமிழகத்தின் அரணாக திமுக கூட்டணி விளங்கும் - வைகோ

May 25, 2019 3:01 PM

தமிழகத்தின் அரணாக திமுக கூட்டணி இருக்கும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் வைகோ சந்தித்தார். அப்போது மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணேசமூர்த்தியும் உடன் இருந்தார். இருவரும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.