​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திர மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஜெகன்மோகன் ரெட்டி

Published : May 25, 2019 2:50 PM

ஆந்திர மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஜெகன்மோகன் ரெட்டி

May 25, 2019 2:50 PM

ஆந்திர மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஜெகன்மோகன் ரெட்டி உரிமை கோரி உள்ளார்.

அந்த மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 தொகுதிகளை கைப்பற்றி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யப்பட்ட புதிய எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் அமராவதியில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆளும் கட்சி சட்டமன்றக் குழுத் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, அவர் ஆந்திர மாநில ஆளுனரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிவுள்ளார். வருகிற 30-ஆம் தேதி அவர் ஆந்திர மாநில முதலமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.