​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய கிரிக்கெட் அணிக்கு நரேந்திரமோடி வாழ்த்து

Published : May 25, 2019 12:56 PM

இந்திய கிரிக்கெட் அணிக்கு நரேந்திரமோடி வாழ்த்து

May 25, 2019 12:56 PM

இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்று நாடு திரும்ப நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக நரேந்திரமோடிக்கு, தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வாழ்த்து கூறி இருந்தார்.

இதைச் சுட்டிக் காட்டி பதிவிட்டுள்ள நரேந்திரமோடி, விராட் கோலிக்கு நன்றி கூறி இருப்பதுடன், தங்களுக்கும் இந்திய அணிக்கும் வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார். இதேபோல் அணியின் தலைமைப் பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் மோடிக்கு வாழ்த்து கூறி இருந்தார். அவருக்கும் மோடி நன்றி கூறி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.