​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடைகளில் குடிநீர் பாட்டில்களை களவாடிச் செல்லும் குரங்குகள்

Published : May 25, 2019 12:16 PM



கடைகளில் குடிநீர் பாட்டில்களை களவாடிச் செல்லும் குரங்குகள்

May 25, 2019 12:16 PM

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நிலவும் குடிநீர் பஞ்சத்தால், கடைகளில் இருக்கும் குடிநீர் பாட்டில்களை குரங்குகள் களவாடிச் செல்வது அதிகரித்துள்ளது.

நகர் பகுதியில் பெருகி காணப்படும் குரங்குகள், மனிதர்களிடம் குடிநீர் பாட்டில்கள் இருப்பதை கண்டால், அவற்றையும் பறித்துச் சென்றுவிடுகின்றன. சில நேரங்களில் அவற்றின் தாகத்தை புரிந்துகொள்ள முடிவதாகவும், சில வேளைகளில் இடையூறாக அமைவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.