​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தாய் கண்ணெதிரே ஒற்றை காட்டு யானையால் தாக்கப்பட்ட 7 வயது சிறுமி

Published : May 25, 2019 11:27 AM

தாய் கண்ணெதிரே ஒற்றை காட்டு யானையால் தாக்கப்பட்ட 7 வயது சிறுமி

May 25, 2019 11:27 AM

பொள்ளாச்சி அருகே தாய் கண்ணெதிரே ஒற்றை காட்டு யானை தாக்கி 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம், அவரது குடும்பத்தினரை தாங்கவியலாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே நவமலையில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் வசிப்பவர், வேட்டை தடுப்பு காவலர் ராஜீ. இவரது மனைவி சித்ரா. இவர்களின் 7 வயது மகள் ரஞ்சனா அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சித்ரா, மகள் ரஞ்சனாவை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சி சென்றுவிட்டு, பேருந்தில் நவமலை திரும்பினார்.

பேருந்தில் இருந்து இறங்கி இருவரும் வீடு நோக்கி நடந்து சென்றபோது, அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து வெளிவந்த ஒற்றை காட்டு யானை இருவரையும் விரட்டியது. இதனால் அச்சமடைந்த தாயும், மகளும் துரிதமாக ஓடியுள்ளனர். ஆனால் சிறுமி ரஞ்சனா யானையிடம் சிக்கிக்கொண்டார். சிறுமியை தும்பிக்கையால் தூக்கிய யானை கீழே வீசியது. இதை கண்டு மிரண்ட தாய் சித்ரா, கூக்குரல் எழுப்பியதையடுத்து அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர். அதற்குள் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.