​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
10ம் வகுப்பு மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவெண்கள் பட்டியல் வரும் திங்கள்கிழமை வெளியீடு

Published : May 24, 2019 7:21 PM

10ம் வகுப்பு மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவெண்கள் பட்டியல் வரும் திங்கள்கிழமை வெளியீடு

May 24, 2019 7:21 PM

நிகழாண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்கள் பட்டியல், வரும் திங்களன்று வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஸ்கேன்.டிஎன்டிஜிஇ.இன்(scan.tndge.in) என்ற வலைதளத்திற்கு சென்று, எஸ்.எஸ்.எல்.சி மார்ச் 2019 ரீ-டோடல் ரிசல்ட்ஸ்(SSLC MARCH 2019 RETOTAL RESULTS) என்ற வாசகத்தை அழுத்திய பின்னர் தோன்றும் பக்கத்தில் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண் மாற்றங்களுடன் கூடிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், வருகிற திங்கள் பிற்பகல் முதல் டபிள்யு டபிள்யு டபிள்யு.டிஜிஇ.டிஎன்.நிக்.இன்(www.dge.tn.nic.in) என்ற வலைதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து, பட்டியலில் பதிவெண்கள் இடம்பெறவில்லை எனில், சம்பந்தப்பட்ட தேர்வர்களின் மதிப்பெண்களில் எவ்வித மாற்றமும் இல்லை என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.